2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, மாகாண நிர்வாகம், ஆளணி உள்ளூராட்சி, புனர்வாழ்வு மீள்குடியேற்றம், கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை முதலாம் வகுப்பு விசேட தரத்தைச் சேர்ந்த யூ.எல்.ஏ.அஸீஸ் இன்று புதன்கிழமை முதல் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டடுள்ளார்.

இவர் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூகசேவை, விளையாட்டு, கூட்டுறவுத் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராகவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவர் இலங்கை நிர்வாக சேவையில் 23 வருட அனுபவமுடையவர்.

இவர் நீண்டகாலமாக இப்பிராந்தியத்தின் கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் சமூகசேவை போன்ற துறைகளில் அரும் பணியாற்றியுள்ளார். இவரது சேவைக்கால நிமித்தம் இப்பிராந்திய மக்களால் மிகவும் பாராட்டப்பட்டும் கௌரவிக்கப்பட்டுமுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • ACM Wednesday, 26 September 2012 03:27 PM

    வாழ்துக்கள்

    Reply : 0       0

    nausham Thursday, 27 September 2012 02:27 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    rizad Thursday, 27 September 2012 07:10 AM

    அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தை தர வேண்டுகிறேன்.

    Reply : 0       0

    NAJEEB ADDA Thursday, 27 September 2012 07:55 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    hilmy.Nintavur Thursday, 27 September 2012 01:53 PM

    அல்ஹம்துலில்லஹ். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    INAMULLAH S.L.H. Saturday, 29 September 2012 04:16 PM

    அல் ஹம்துலில்லா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X