2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிளிவெட்டியில் நடமாடும் வைத்திய சேவை

Super User   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக கிளிவெட்டியில் இலவச நடமாடும் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்துவதற்கு திருகோணமலை நகர சபை ஏற்பாடு செய்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அனுஷ;டிக்கப்படுகின்றது. இதன் நிறைவு நாளான எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்நடமாடும் வைத்திய சேவை கிளிவெட்டியில் திருகோணமலை நகரச பையின் தலைவர் க.செல்வராசா தலைமையில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு திருகோணமலை நகர சபையினால் கடந்த செவ்வாய்க்கிழமை நகர சபையின் வளாகத்தில் மரம் நடுகை  மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .