2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வேலைவாய்ப்பு பணியகத்தின் சமரசப் பிரிவில் தமிழ் மொழி தெரிந்தவரை நியமிக்க கோரிக்கை

Super User   / 2013 மார்ச் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சமரசப் பிரிவில் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகத்தர் ஒருவரை கடமையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை மூதூர் பீஸ் ஹோம் நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கடிம் மூலம் விடுத்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மூதூர் பீஸ் ஹோம் நிறுவனம இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சமரசப் பரிவில் தமிழ் மொழி  தெரிந்த உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இல்லாததினால் அப்பிரிவிற்கு வரும் தமிழ் மொழி பேசும்   மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

வெளிநாடு சென்றுள்ள தமது உறவினர்கள் சம்பந்தமான பிரச்சினைகளை முறையிட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் குறித்த பிரிவை நாடிவரும் தமிழ் பேசும் மக்கள் தமது பிரச்சினையை உரிய முறையில் தெரியப்படுத்த முடியாது திரும்பிவரும் நிலைமை அண்மைக் காலமாக தொடர்ந்து வருகின்றது.

அவ்வாறு செல்பவர்களில் சிலர் இரு மொழிகளில் பேசக்கூடியவர்களை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அழைத்துச் செல்வதினால் அவர்களுக்கான     செலவீனத்தையும்  சுமக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன் நேர விரயமும் ஏற்படுகிறது.

மூதூரைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு ஏற்பட்ட சம்பவத்தின் பின்பு வெளிநாடுகளில் தொழில் புரிந்துவரும் தமது தொடர்பில் இல்லாத அல்லது பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான உறவினர்கள் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் உறவினர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதனால் வேலை வாய்ப்புப் பணியகத்தின் சமரசப் பிரிவிற்கு நாளாந்தம் ஏராளமான தமிழ்மொழி பேசும் மக்களும் வருகை தந்தவண்ணமுள்ளனர். எனவே, மிகவும் சிரமத்திற்குள்ளாகி வரும் இம்மக்களின் நிலைமையைக் கவனத்திற் கொண்டு தமிழ்மொழி தெரிந்த ஒருவரையாவது குறித்த பிரிவில் தினமும் கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஆவணம் செய்யமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இக்கடிதத்தின் பிரதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலனோம்பல் அமைச்சர் டிலான் பெரேரா, தேசிய மொழகள் மற்றும் சமூக  ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0

  • vasisuga Thursday, 21 March 2013 08:47 AM

    வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு மாத்திரதமல்ல, எல்லா அரச நிறுவனங்களுக்கும் இதனையொத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X