2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'சுயாட்சி அதிகாரங்களுடன் அரசியல் தீர்வு வேண்டும் என்பதே சர்வதேசத்தின் தேவை'

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

'வடக்கு கிழக்கு மாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பூரண நம்பிக்கைகையை பெற்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அரசியல் அபிலாஇஷகளை வென்றெடுப்பதில் விட்டுக்கொடுக்காத கட்சி என்றும் சர்வதேச சமூகம் கணித்துள்ளது' என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'இதன் அடிப்படையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று வற்புறுத்தி வருகின்றன' என்றும் இரா.சம்பந்தன் மூதூர் பிரதேசத்தில் லிங்கபுரம் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

'சர்வதேச சமூகமும் நாட்டைப் பிரிக்காது ஒன்றுபட்ட நாட்டினுள் வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும்' என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X