2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா கல்வி வலய தமிழ் தின போட்டிகள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா கல்வி வலயத்தின் கிண்ணியா கோட்ட மட்டத்திற்கான தமிழ் மொழித் தின விழாப் போட்டி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை
தி/கிண்ணியா இஹ்சானியா மகளிர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழி பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ரகுமத்துல்லா தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வுக்கு கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஹமது, இஹ்சானியா மகளிர் வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.எம்.பாறூக் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், வாளவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் வலய மட்டப் போட்டிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .