2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வு தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கியாஸ் ஷாபி


திருகோணமலை மாவட்ட சமயங்களின் செயற்பாட்டு ஒன்றியத்தினால்;; தெரிவு செய்யப்பட்ட மூவின பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்றை நேற்று கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டு இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்து.

சகாவா மற்றும் சேவா லங்கா மன்றத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட சமயங்களின் செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பத்மநாத குருக்கள் தலைமையில் நடைபெற்ற இச்செயலமாவில் ஒன்றியத்தின் பொருளாளர் மஹிந்தவனசதேரர், உறுப்பினர்களான அருட்
தந்தை சூரியகுமார், மௌலவி எம்.வை.ஹதியத்துள்ளா ஆகியோர் கலந்துகெண்டனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் சமயங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், கசப்புணர்வுகள் திருகோணமலை மாவட்டத்தில்
ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்கு பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான செயலமர்வுகளை இவ் ஒன்றியம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .