2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

கிண்ணியா பிரதேச மீனவர்கள் எதிர்வரும் 29ஆம் 30ஆம் திகதிகளில் கடலுக்கு மீன் பிடிப்பதற்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடித் திணைக்கள பரிசோதகர் இத்தகைய அறிவுறுத்தலொன்றை கிண்ணியா பிரதேச பள்ளிவாயல்கள் ஒலிபெருக்கிகள் மூலம் பிரதேச மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேற்படி இரு தினங்களில் மீன்பிடித் திணைக்கள பரிசோதர்கள் கிண்ணியா பிரதேச மீனவர்களால் பாவிக்கப்படும் இயந்திர வள்ளங்கள், வலைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பரிசோனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு ஒத்துழைப்பு வழங்காத மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .