2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் விபசார விடுதி முற்றுகை

Super User   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கஜன், பரீத்

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதேச மக்களினால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்போது அங்கிருந்த  இரண்டு  யுவதிகள் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றனர். இதேவேளை, அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யுவதி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணகைளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்த பிரதேசத்திலுள்ள பல  வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் வெளியூர் சுற்றுலா பிரயாணிகளை விட பெருமளவில் உள்ளூர் வாசிகளே தங்கி வருகின்றதாக  பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றர்.

  Comments - 0

  • siyana Wednesday, 24 April 2013 07:51 AM

    பொலிஸார் பொய் என கூறுகிறார்கள். அது சரியா..???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .