2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலேரியா விழிப்புணர்வு நிகழ்வுகள்

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எச்.அமீர்


உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சர்வோதயமும் திருகோணமலை பிராந்திய மலேரியா தடை இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மலேரியா விழிப்புணர்வு நிகழ்வு  நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது.

சர்வோதயத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் வீ.ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.அனுஷியா, மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.ஜமுனா, திருமலை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஞானகுணாலன், திருமலை சுகாதார வைத்திய அதிகாரி ரி.தவகொடிராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது திருமலை 3ஆம் கட்டை சர்வோதய தலைமை அலுவலகத்திலிருந்து  திருகோணமலை நகரம் வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மலேரியா சம்பந்தமான பொது அறிவூட்டல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X