2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பாலத்திற்கு அருகிலுள்ள வெள்ளைமணல் பகுதியிலேயே நேற்று திங்கட்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  கிண்ணியாவை சேர்ந்த யூ.சப்ராஸ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X