2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருகோணமலை சுமேதகம மக்கள் ஆர்பாட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


வீதிபோக்குவரத்து மற்றும் வடிகான் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கோரி திருகோணமலை, சுமேதகம மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தமது கிராமத்திற்கு சுமார் பத்த லருட காலத்திற்கு மேலாக வீதிபோக்குவரத்து வசதிகள் மற்றும் வடிகான் வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படவில்லை என்றும் மழைக் காலங்களில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வசதிகளை ஏற்படுத்திகொடுக்குமாறு கோரி இம்மக்கள்  கண்டி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக திருகோணமலை- கண்டி வீதியில் பாரிய வாகன நெரிசல்  ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X