2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பள்ளிவாயல் நிர்மாண பணிக்கான தடையை நீக்குமாறு கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 10 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாப் பிரதேச செயலகப் பிரிவின் கண்டல்காடு மீள்குடியேற்ற கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் நிர்மாண பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்திற்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
"கண்டல்காடு மீள்குடியேற்றக் கிராமத்தில் கட்டப்பட்டு வந்த பள்ளிவாயல் நிர்மாண ;பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இக்கிராம மக்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மீள்குடியேறியிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் மீள்குடியேறும் மக்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டே மீள்குடியேற்றம் இடம்பெற்றது.

எனினும் இங்கு மீள்குடியேறிய மக்களுக்கு இந்த அரசாங்கத்தினால் இதுவரை எவ்வித உதவிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில்  பொதுமக்கள் ஏதோ ஒரு வகையில் நிர்மாணிக்கும் பள்ளிவாசலும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை மிகவும் வேதனையைத் தருகின்றது.

இப்பகுதி மக்கள் இடம்பெயர்வதற்கு முன் இங்கு பள்ளிவாசல் இருந்தமைக்கான தடயங்கள் இன்னும் அழிந்து போகவில்லை. எனவேஇ இருந்த பள்ளியின் மீள்நிர்மாணமே இங்கு இடம்பெறுகின்றது.

இப்பள்ளி நிர்மாண தடையானது கடந்த இருவருடங்களுக்கு முன் தாம் குடியிருந்த குடிசைகள்; எரிக்கப்பட்டமையை ஞாபகமூட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  எனவேஇ இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பள்ளிவாயல் நிர்மாணப் பணியை தொடர்ந்து முன்னெடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X