2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எத்தாபெந்திவெவ பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம்

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதியின் ரொட்டவெவ எத்தாபெந்திவெவ பிரதேச மக்கள் நேற்று செவ்வாய்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருகோணமலை - புத்தளம் வீதி போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

மொறவெவ  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, எத்தாபெந்திவெவ  வீதி பல வருட காலங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

கிரவல் போடப்பட்டிருப்பதினால் வாகனங்கள் செல்லும் போத எழும் புழுதி காரணமாக மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர். அத்துடன் சுவாச நோய்கள் ஏற்பட்டு வருவதை தடுக்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுமே கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நண்பகல் வரைஇந்த போராட்டம் இடம்பெற்றது. எனினும் ஒரு வாரத்திற்குள் வீதி புனரமைப்புக்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் வழங்கிய உறுதிமொழி வழங்கினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X