2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர் படை அணி வெளியேறல்

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


2013ஆம் ஆண்டின் முதலாவது தேசிய இளைஞர் படை அணி ஆறு மாத கால பயிற்சியின் பின்னர் கிண்ணியா தேசிய இளைஞர் பயிற்சி முகாமில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறியது.

கிண்ணியா பிரதேச தேசிய இளைஞர் பயிற்சி முகாமின் பொறுப்பதிகாரி கெப்டன் எம்.ரீ.ஏ.ஜீவகேகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கனணி, மொழிகள், தலைமைத்துவம், கலைகள், ஆளுமை விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் ஆகிய துறைகளில் 84 இளைஞர் யுவதிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்திருந்தனர்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவை படையணியின் பணிப்பாளர் லெப்டினன் கேர்ணல் ஏ.எச்.லியனகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X