2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புல்மோட்டையில் ரணவிரு கிராமம் அமைக்க நடவடிக்கை: அன்வர்

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்மோட்டை பிரதேசத்தில் ரணவிரு கிராமம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

புல்மோட்டை 14ஆம் கட்டை பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள 60 ஏக்கர் தனியார் காணி ரணவிரு கிராமத்திற்காக அபரிக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான நில அளவை பணிகள் தற்போது இடம்பெறுகின்றன. எனினும் இந்த அளவீடுகள் எதுவும் பிரதேச செயலாளரின் அனுமதி  பெறப்படாமல் இடம்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த நடவடிக்கை புல்மோட்டை மக்கள் மத்தியில் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. காணி தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றபோது படையினரின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண  சபையின் அடுத்த அமர்வில் தெரிவிக்கவுள்ளேன்" என்றார்.

  Comments - 0

  • thideer Friday, 27 September 2013 08:52 PM

    அன்வர் நாங்க பின்னுக்கு வருவோம், பயப்பிடாமல் முன்னுக்குப் போங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .