2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை முதல் இடத்தில்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட வெசாக் பந்தல் அலங்காரப் போட்டியில் திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த அலங்காரப்போட்டிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையால் நடத்தப்பட்டது.

இம் மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் எட்டு பிரதேச செயலகங்கள் பங்கு பற்றிய இப் போட்டியில் இரண்டாம் இடத்தை மூதூர் பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தை தாம்பலாகமம் பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.

போட்டியில் பங்கு பற்றிய அனைத்து அலங்காரப் பந்தல்களும் திருகோணமலை 4ஆம் மைல்கல்லில் உள்ள மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .