2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

வல்லப்பட்டையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, கண்டிவீதியில் ஆநுராதபுரம் சந்தி அருகாமையில் வைத்து வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டக்களப்பில் இருந்து வந்த முச்சக்கர வண்டியை பரிசோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 1கிலோ 700 கிராம் நிறை கொண்ட வல்லப்பட்டை பிடிக்கப்பட்டது.

முச்சக்கரவண்டியில் பயணம்செய்த நான்கு பேரும் மேலதிக விசாரணைகளுக்காக  உப்புவெளி பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அம்பாறை,கல்முனை,மட்டக்களப்பு,  மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .