2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

மாணவர் பிரதிநிதிகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  திருகோணமலை வளாக முதல்வரை பணியிலிருந்து இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர் பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் வியாழக்கிழமை  மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது சில விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாக மாணவர்கள் தெரிவித்தனர்.

முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை வளாக முதல்வர் விவகாரத்தில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என மாணவர் பிரதிநிதிகளுக்கு கிழக்கு பல்கலைகழக உபவேந்தர்  இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, ஒரு மாதத்துக்;குள் தமது வளாக முதல்வர் தொடர்பான பூர்வாங்க விசாரணையை நிறைவுசெய்வதற்கும்  அதன் பின்னர் முழு அளவிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் உபவேந்தர் இணக்கம் தெரிவித்ததாக திருகோணமலை வளாக மாணவர் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இதேவேளை, ஐந்தாவது நாளாகவும்  நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை வளாக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக உபவேந்தருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் குறித்து, மாணவர் ஒன்றிய அங்கத்தர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தமது பகிஷ்கரிப்பை கைவிடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் மாணவர் சங்கப் பிரிதிநிதி மேலும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்குமான மாணவர்கள் திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை வளாக முதல்வர் வைத்திய கலாநிதி வர்ணகுலேந்திரன்  மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் வளாகத்திற்கான பதில் முதல்வராக கலாநிதி ரகுராம் கடந்த 23ஆம் திகதி நியமிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .