2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த 04 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் சைக்கிள் ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்தது.  இந்த நிலையில், மோட்டார் சைக்களில் சென்ற 02 பெண்களும் சைக்கிளில் சென்ற 02  சிறுவர்களுமே படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளாகி வீதியில் அடிபட்டு எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடந்த  மேற்படி 04 பேரையும்  அவ்வழியால் வந்த கடற்படையினர் அலிஒலுவ வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வெருகல் மத்தியஸ்த  சபையில் கடமையாற்றும் மத்தியஸ்தசபை உறுப்பினர்களான தயாபரன் சரஸ்வதி (வயது 35), ஆனந்தராசா நீலவிழி (வயது 36) மற்றும்  தவச்செல்வன் சுசீலன் (வயது10) ஆகியோர் தற்சமயம் அலிஒலுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,  மாணிக்கம் நிதர்ஷன் (வயது 05) அவசர சத்திர சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக அலிஒலுவ வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியஸ்த சபை உறுப்பினர்களான பெண்கள் இருவரும் மத்தியஸ்த சபையில் கடமையாற்றிவிட்டு, மரண வீடொன்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்கு உள்ளானார்கள்.

இந்த விபத்து  குறித்து சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .