2026 மார்ச் 30, திங்கட்கிழமை

குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இம்மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோகம் திங்கட்கிழமை (11) முதல் தற்காலிகமாக மட்டுப்;படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இம்மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகமானது வறட்சி நீங்கும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கே வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில்  ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக  மாவட்டத்தில் கந்தளாய் போன்ற பெரிய குளங்களும் மற்றும் சிறிய குளங்கள் யாவும் வற்றி போயுள்ளன.

இதன் காரணமாக, பாவனையாளர்கள் குடிநீரை முன் கூட்டியே சேமித்து சிக்கனமாக பாவிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் கோரியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .