2026 மார்ச் 30, திங்கட்கிழமை

இ.த.க.இன் திருமலை கிளையின் நிர்வாகிகள் தெரிவு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவராக சி.தண்டாயுதபாணியும் செயலாளராக க.கனகசிங்கமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

பொருளாளராக கோ.சத்தியசீலராஜா, உபதலைவராக ச.விஜயகாந், உபசெயலாளராக க.செல்வராசாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் புனரமைப்பு கூட்டம் புதன்கிழமை (27) பொது நூல்நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்போது  16 பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .