2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆஸி. இராஜந்திரக்குழு திருமலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்,  சி.குருநாதன்

திருகோணமலை மாவட்டத்தின் உண்மையான தரை நிலவரம் பற்றி அறிவதற்காக இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு திருகோணமலைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டது. 

வர்த்தக அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, விவசாயம் மற்றும்  நடுத்தர வர்த்தகத்துறை தொடர்பில்  திருகோணமலை மாவட்ட வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத் தலைவர் வி.கலைச்செல்வனை அவரது அலுவலகத்தில் இக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

அவுஸ்திரேலியா  முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் இக்குழுவினர் கலந்துரையாடியதுடன்,  விரிவான ஆய்வையும் மேற்கொண்டது. தனியார் துறையினருக்கு எப்படி அவுஸ்திரேலியா உதவலாம் என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

இந்தக் குழுவுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உதவித்திட்ட பிரதிநிதி கத்தரினா ஹரிகன் தலைமை வகித்தார். இக்குழுவில் அவுஸ்திரேலய உதவித்திட்ட ஆலோசகர் ஓவன் எட்மன்டஸ் மற்றும் செயற்றிட்ட முகாமையாளர் மொமினா சாகிப் ஆகியோர் அங்கம் வகித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .