2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பப்படிவம்

Gavitha   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

2015ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களுக்குமான பணியாட்களின் தேவைப்பாடு குறித்து, தேர்தல் அலுவலர்களை நியமப்பதற்காக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றுக்கு தேவையான அறிவுறுத்தல்களுடன் விண்ணப்பப்படிவங்களை திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுலகம் செவ்வாய்க்கிழமை (18) அனுப்பி வைத்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், இது குறித்து திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் நாலக்க ரத்நாயக்க தெரிவிக்கையில்,

பணியாட்களின் தேவைப்பாடு தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரின் DE/ADM/PRE/01/2015 ஆம் இலக்க 2014.11.14 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கு இணங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்கள், அவர்களின் கீழ் கடமை புரியும் சகல அலுவலர்களின் தகவல்களை குறித்த படிவத்தில் பூரணப்படுத்தி இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் திருகோணமலை தேர்தல்கள் அலுகத்துக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலதிகமாக படிவங்கள் தேவைப்படும் பட்சத்தில், திருகோணமலை தேர்தல்கள் அலுலகம், மாவட்டச்செயலகம், பிரதேச செயகங்கள், வலயக்கல்வி அலுலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .