Thipaan / 2015 ஜனவரி 24 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்
திருகோணமலை நகரிலும் சுற்றுப்புறங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், அருணகிரி சோனகவாடி, அரசடி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் இன்று சனிக்கிழமை(24) காலை சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி விஜயகுமார், திருகோணமலை நகர சபைத்தலைவர் க. செல்வராஜா, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ. பத்மசீலன் மற்றும் சுகாதார பரிசோதர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
இவ் நடவடிக்கைகளில், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், நகர சபை சுகாதார ஊழியர்கள், இந்துக் கல்லூரி மாணவர்கள், சாரணர்கள் நகரசபை சுகாதார மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் விஜயகுமார் தெரிவித்தார்.


2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago