Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்ம கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (10) கிண்ணியா நகர சபைக் கேட்போர் கூடத்தில் நகரசபைத் தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
'உக்கும் கழிவுப் பொருட்களை மீள் சுழற்ச்சிக்குட்படுத்தி கூட்டுப் பசளை தயாரிக்கும் முறைக்கான வேலைத்தட்டம் தற்போது கிண்ணியா பைசல் நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நிறைவடைகின்ற போது அந்தப் பிரதேசத்தில் கழிவுப் பொருட்கள் சம்மந்தமாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. மாறாக ஏனைய பிரதேசங்களில் இருந்து நாம் கழிவுப் பொருட்களை கொண்டு வர வேண்டிய தேவை ஏற்படும்.
பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், மத ஸ்தாபனத் தலைவர்கள் என பலரும் பங்கேற்றிருந்த அந்தக் கலந்துரையாடலில் வீடுகள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை காலதாமதமின்றி விரைவாக அகற்றுவது தொடர்பாக பல்வேறு நடடிக்கைகளுக்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு வீதி விளக்குகளை பிரதேச குடியிருப்பாளர்களின் உதவியோடு பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
1 hours ago