Gavitha / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதான வீதியில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து திருக்கோவில் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் விநாயகபுரம் 03ஆம் பிரிவைச் சேர்ந்த பி.கதாகரன் (வயது 36) மற்றும் என். நிலோஜன் (வயது 20) ஆகிய இருவருமே மேற்படி விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இதில் பி.கதாகரன் என்ற இளைஞர் மேலதிகச் சிகிச்சைகளுக்காக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்துக்கள் மது பாவனைகள் மற்றும் வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் போன்றவற்றினால் ஏற்படுவதாகவும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.தமிழ்தாசன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago