Gavitha / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதியேற்றதன் பின்னர், முதற் தடவையாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) திருமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.நடராசமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலை 2 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விஷேட கூட்டம் ஒன்றிலும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளர்.
இவ்விஷேட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago