George / 2015 மார்ச் 04 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் மற்றுமொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஒன்றைப் பெற்றுத்தரக்கோரி, பொதுமக்கள் புதன்கிழமை(4) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
கிண்ணியா மய்யம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கோரிக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அந்த மகஜரில், எமது ஊரில் ஏற்கனவே இருக்கின்ற சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எமது மக்களுக்கு ஓரளவு சுகாதார சேவைகளை வழங்கி வந்தாலும் எமது சனத்தொகைக்கு அந்த ஒரு அலுவலகம் மாத்திரம் போதுமானதல்ல.
ஏனெனில், கிண்ணியா நகர சபைக்குட்பட்ட எல்லைக்குள் மாத்திரம் 19,657 குடும்பங்களைச் சேர்ந்த 40,455 பேரும் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக்குள் 21,813 குடும்பங்களைச் சேர்ந்த 30,524 பேரும் வாழ்கின்றனர். இது மிகப் பெரியதொரு மக்கள் தொகையாகும்.
இவ்வளவு பெரியதொரு சனத் தொகையினருக்கு சுகாதார சேவை வழங்குவதற்காக எம்மிடம் இருப்பது ஒரேயொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மட்டுமே.
இவ்விரண்டு பிரதேச எல்லைக்குள்ளும் மாதாந்தம் நூற்றுக்கணக்கான பிள்ளைப் பேறுகள் இடம்பெறுகின்றன. எனினும் எமது சுகாதரர சேவைகளைப் இந்த ஒரு அலுவலகத்தினால் மட்டும் பெற முடியாதிருக்கின்றது.
அது மட்டுமல்லாது கிண்ணியாவின் எல்லைப் புறங்களான சூரங்கல், மகாமாறு, உப்பாறு, நடுஊற்று, வான்எல போன்ற பிரதேசங்களிலுள்ள ஏழை மக்கள் பல கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்து சுகாதார பணிமனைக்கு வந்து தமது சுகாதார தேவைகளை பலநூறு ரூபாய்களைச் செலவளித்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் சுகாதாரப் பணிமனைக்கு வந்து தமது சுகாதார சேவைகளைப் பெறவேண்டியருக்கிறது. எனதோன் இன்னுமொரு பிரதேச சுகாதாரப் பணிமனையின் தேவை குறித்து வலியுறுத்துகிறோம்.
திருமலை மாவட்டத்தின் பின் தங்கிய மிகக் குறைந்த சனத் தொகையைக் கொண்ட மோமரங்கடவெல, வெருகல், பதவிசிரிபுர, போன்ற பிரதேசங்களுக்கே தனியான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வழங்கப்பட்டிருக்கின்றது.
கிண்ணியாவின் சனத் தொகைக்கு குறைந்தது மூன்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் அவற்றில் இரண்டு பணிமனையனையாவது பெற்றுக் கொள்வது எமது தார்மீக உரிமையாகும்.
எனினும் இதனை உரியவர்களிடம் சென்று பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியசாலிகளாய் நாம் இருக்கிறோம் என்று இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago