Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டத்தின் கல்வித்தரத்தை அதிகரிப்பதற்காக விரையில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (24) விஜயம் மேற்கொண்ட அவர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற தேசிய பாடசாலை அதிபர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு கரு;தது தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய பாடசாலைகள் மத்திய அரசினால் நிர்வகிகப்பட்டாலும் அவற்றுக்கான வசதிகளை மாகாண அமைச்சு செய்து கொடுக்க வேண்டும்.
எனது அமைச்சின் ஊடாக தேசிய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தீர்த்து வைக்;க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago