Princiya Dixci / 2015 மார்ச் 26 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் காட்டுயானைகளின் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்கே பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் முதலலைகளின் தொல்லைகளும் அங்கு குறைந்தபாடில்லை.
ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் குடிகொண்டுள்ள முதலைகள், அங்கு செல்வோரின் உயிர்களை குடிப்பது மட்டுமன்றி, ஊருக்குள் படையெடுத்து வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.
அவ்வாறான சம்வமொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிப் பொத்தானை கிராமத்திலுள்ள வீட்டிற்குள் முதலை புகுந்துள்ளது.
இக்கிராமத்தில் உள்ள ஈச்சம் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் வாய்க்கால் ஊடாகவே முதலைகள் ஊருக்குள் நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் புகுந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் 12 அடி நீளமுள்ள முதலையை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago