Thipaan / 2015 மார்ச் 31 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்துக்கென நவீன வடிவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகள் கொண்ட மூதூர் பிரதேச சபையின் புதிய கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
இந்நிகழ்வு மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கௌரவ அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இணைந்து இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த பிரதேச சபையின் கட்டடம் புறநெகும திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு சுமார் 40 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago