Princiya Dixci / 2015 மே 12 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்துதருமாறு கோரி, கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் செவ்வாய்கிழமை (12) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'சொந்த மாவட்டங்களையும் கணவன் மற்றும் மனைவி, பிள்ளைகளையும் கடந்த 4, 5 வருடங்களாக தனியே விட்டுவிட்டு கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றிவருகின்றோம். எங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்து தருமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டிடம் தெரிவித்தனர்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த சுமார் 80 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago