Sudharshini / 2015 மே 12 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்ட பிராந்திய செய்தியாளர், செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தாக்கபட்ட சம்பவத்துக்கு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இன்று (12) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (11) பன்குளம் மகதுல்வௌ எனும் இடத்தில் இடம்பெற்ற விவசாய சம்மேளனக் கூட்டம் தொடர்பில், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என தடுத்து தாக்கியதுடன் அவருடைய புகைப்படக் கருவிகளையும் சேதமாக்க முற்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அவர் பன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை ஊடகவியாளர் சங்கமானது கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன், நல்லாட்சியில் ஊடக சுதந்திரம் வலுப்பெரும் இன்றைய சூழலில் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் இவ்வாறான செயலில் ஈடுபட்வர் மீது பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகவியாளர் சங்கத்தினால் பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago