George / 2015 மே 13 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்துக்கான நீர்விநியோகத் திட்டம், புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20 கிராமங்களில் வாழும் சுமார் 2,000; குடும்பங்களுக்கு இந்த நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் சுத்தமான குழாய் நீர் இணைப்பு வழங்கப்படவுள்ளதாக வெருகல் பிரதேச நீர் வழங்கல் திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஏ. ஜெகதீபன் தெரிவித்தார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஈச்சிலம்பற்றுப் பிரதேச மக்களுக்கு இந்த நீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும் என வெருகல் பிரதேச நீர் வழங்கல் திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஏ. ஜெகதீபன் மேலும் தெரிவித்தார்.
அங்குரார்ப்பண நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன், உதவிப் பிரதேச செயலாளர் செல்வி ஏ. லதுமிரா, வெருகல் பிரதேச நீர் வழங்கல் திட்டத்துக்கு பொறுப்பான அதிகாரி ஏ. ஜெகதீபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சிவகலா தயாபரன் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago