Thipaan / 2015 மே 20 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர் மக்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சம்பூரில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையுத்தரவு இன்று (20) நீக்கப்பட்டுள்ளதையடுத்தே இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலைமை குறித்து ஆராயச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர், இது தொடர்பில் அறிவித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குவந்துள்ளது.
தமது காணிகளை விடுவிக்ககோரி கடந்த மூன்று நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்த தேவராசா பிரேம்குமாரின் போராட்டமும் முடிவுக்கு கொணடுவரப்பட்டுள்ளது.
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago