Princiya Dixci / 2015 மே 25 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை, சம்பூர் பிரதேச மக்கள் மீள்குடியேற்றத்தின் நிமித்தம் தங்களது காணிகளைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கென சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம், மீள்குடியேற்றத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் மீளக் கையளிக்கப்படாவிட்டாலும் கடந்த 22ஆம் திகதி தொடக்கம் காணிகளின் உரிமையாளர்கள் சுயமாக சென்று தமது காணிகளைத் துப்பரவு செய்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் வீடுகளும் கட்;டடங்களும் அகற்றப்பட்டு தரைமட்டமாக காணப்படுவதாக கட்டைப்பறிச்சான் இடைத்தங்கல் முகாம் தலைவரான இரத்தினம் ரவீந்திரன் தெரிவித்தார்.
சில அடையாளங்களை வைத்து காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை அடையாளம் கண்டிருந்தாலும் எல்லைகளை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.
எனவே, நில அளவைத் திணைக்களம், காணிகளை அளவீடு செய்து எல்லைகளை அடையாளமிட உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது காணிகளை துப்பரவு செய்துள்ள குடும்பங்களில் ஒரு பகுதியினர் தற்காலிக கொட்டில்களை அமைத்து அப்பகுதியில் தங்கியுள்னர் என்றும் ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.

6 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
2 hours ago