Gavitha / 2015 மே 25 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
புங்குடுதீவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை (25) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மாணவர்களாலும் ஆசிரியர்களினாலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கண்டி-திருகோணமலை பிரதான வீதிக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய மாணவி நாளைய தலைவி அல்லவா? தீண்டாதே சீண்டாதே, நீதி வழங்கு கொலையாளிக்கு, தகுந்த தண்டணை வழங்க வேண்டும், இன்று வித்தியா நாளை?, கல்வியும் கலாசாரமும் எம் இரு கண்கள், வித்தியா நீ புதைக்கப்படவில்லை, எங்களில் விதைக்கப்பட்டிருக்கிறாய் முதலான வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொலையாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், தண்டனை வழங்கப்பட வேண்டும், இது போன்று இனி எந்தவொரு மாணவிக்கும் நடக்கக் கூடாது எனக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago