Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மூதூரில் கடந்த ஆறு மாதத்துக்குள் 86 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக மூதூர் பொது சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.எம்.ஆரிப் தெரிவித்தார்.
மூதூர் கிழக்கு, கட்டைபறிச்சான், தோப்பூர் போன்ற பிரதேசங்களில் அதிகமாக டெங்கு நோய் பரவி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருவதனால், அதுகுறித்து மூதூர் பிரதேசசபையின் ஊழியர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள் போன்றோருக்கு தெளிவு படுத்தும் கூட்டம் செவ்வாய்க்கிழமை(9) மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.
டெங்கு நோயை மூதூரில் குறைக்க வேண்டுமாக இருந்தால் தமது வீட்டுச் சூழலில் நீர்தேங்கி நிற்கும் இடங்களை இனங்கண்டு அதனை சீர் செய்ய வேண்டும். இந்நோய் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் என்.நஜாத், மூதூர் பிரதேசபையின் உப அலுவலகங்களின் பொறுப்பதிகாரிகள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச சபையின் சுகாதார தொழிலாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago