Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது சம்பந்தமான உயர் மட்ட கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை (10) சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி தலைமையில் சுகாதார இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.
சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் மற்றும் மூதூர் தளவைத்தியசாலை அபிவிருத்திக்குழுவும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டது.
இதன்போது உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையிலிருந்து மூன்று வைத்தியர்களை மூதூர் தளவைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மூதூர் தளவைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவை விஸ்தரிப்பதற்கு 30 மில்லியன் ரூபாய் பணத்தை முதற்கட்டமாக ஒதுக்குதல், எக்ரே மெசின் கொள்வனவுக்கு 10 மில்லியன் ரூபாய், விசேட வைத்திய நிபுணருக்கான வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கென 5 மில்லியன் ரூபாய், டெங்கு நோய் விசேட பிரிவுக்காக 5 மில்லின் ரூபாய், ஒதுக்கீடு செய்வதற்கும் வைத்தியாகளுக்கு பற்றாக்குறையாகவுள்ள தங்குமிட வசதியை, தனியாரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக அனைத்துக்கும் சுகாதார அமைச்சு இணங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
இதேவேளை மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமையன்று ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை (10) பத்தாவது நாளாகவும் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago