Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி ,வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம் என கிழக்கு மாகணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகணசபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (16) கூடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் பல இடங்களில் பூர்வீகமாக அம்மக்கள் வாழ்ந்த காணிகளை அவர்களிடம் கையளிக்கவேண்டும் என்ற நோக்கில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார்.
அதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்;டோவின் தந்தோரபாயமான நகர்வுகளும் எமக்கு உறுதுணையாகவுள்ளது. எனினும், கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் எந்த இன மக்களாக இருந்தாலும், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம்' என்றார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago