Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
கிழக்கு மாகாணசபையினூடாக ஒதுக்கப்படும் நிதியானது மக்களின் வறுமை நிலை, மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு ஆகிய மூன்றம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் சரி சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (16) கூடியபோது, கிழக்கு மாகாணசபையினூடாக ஒதுக்கப்படும் நிதியொதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லையயெனத் தெரிவித்து தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணசபையினூடாக ஒதுக்கப்படும் நிதி தமிழ்ப்; பகுதிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இது கண்டிக்கத்தக்கதாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இன, மத ரீதியாக எமது பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன' என்றார்.
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago