அப்துல்சலாம் யாசீம் / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, திருகோணமலை மாவட்டத்தில் நுகர்வோர் அதிகாரசபையின் சட்டங்களை மீறிய 283 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளிலேயே, அதிகளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும், அதிலும், திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதிகளில் காலாவதியான குளிர்பானங்கள், காலாவதியான பிஸ்கட் வகைகள் அதிகளவில் கைப்பற்றப்பட்டன எனவும், நுகர்வோர் அதிகாரசபையினர் தெரிவித்தனர்.
அத்துடன் கடந்தாண்டு மாத்திரம், 840 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதுடன், 715 வழக்குகள் நிறைவடைந்துள்ளன எனவும், 31 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, மொறவெவ கோமரங்கடவெல, பதவி சிறிபுர பகுதிகளிலும் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago