2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

5 மாணவர்கள் கொலை: சந்தேக நபர்களுக்கான பிணை நிராகரிப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேக நபர்களான விசேட அதிரடிப்படையினர் 12 பேருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த 12 பேரையும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக பர்கள் இன்று திங்கள் கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே பதில் நீதிவான் செ.சசிதரன் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

அதேவேளை மாணவர் படுகொலை தொடர்பான வழக்கு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு தொடர்பான சாட்சியங்கள் செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பதிவு செய்யப்படவும் உள்ளன.

இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச தரப்பில் தோற்றவேண்டிய குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எவரும் மன்றில் சமூகமளித்திருக்கவில்லை.

இதனை நீதவானுக்கு சுட்டிக்காட்டிய எதிர்த்தரப்பு சட்டத்தரணி சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். எனினும் இக்கோரிக்கை நீதவான் நிராகரித்தார்.

விசேட அதிரடிப்படையினர் தரப்பில் தென் மாகாணசபையின்    உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பிரசங்க மன்றில் ஆஜராகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X