Princiya Dixci / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-copy.jpg)
அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த கடைகளை அகற்றுவதற்கு கதிர்காமம் நகரசபை எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள், புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது ஜீவனோபாயத்தைக் கடந்த 20 வருடங்களாக கொண்டு சென்ற இடத்திலிருந்து எம்மை நீக்குவதானால் வியாபார நடவடிக்கைக்கு பொறுத்தமான ஓர் இடத்தினை அமைத்துத் தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த, கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபாலி காரியவசம், கதிர்காமம் கிரிவிகாரையின் தலைமை தேரர் ஆகியோர், நகரசபை அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி உரியதொரு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் அதற்கு, இருநாட்கள் அவகாசம் தருமாறும் கேட்டிருந்தனர். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.
.jpg)
.jpg)
23 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago