2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சிவில் மற்றும் விமான தினம் பிரகடனம்

Super User   / 2013 மார்ச் 18 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் மற்றும் விமான தினமாக இன்று மார்ச் 18ஆம் திகதியை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தல ராஜபக்ஷ விமான நிலைய திறப்பு விழாவில் வெளியிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மார்ச் 18ஆம் திகதியும் சிவில் மற்றும் விமான தினம் நாட்டில் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.இதன் ஞாபகார்த்தமாகவே இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .