2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 ஜூன் 30 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏம். இஸட். எம். இர்பான்

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அடிக்கல் நேற்று சனிக்கிழமை நடப்பட்டது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, சுகாதார பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க, நீர்வழங்கல் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஸ, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எல்.டபில்யு.எம்.பியட். ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.கே.இந்திக மற்றும் நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பத்து மாடிகளை கொண்ட இந்த வைத்தியசாலை ஹம்பாந்தோடடை, சிரிபோபுர பிரதான பாதை அருகே இந்த வைத்தியாசை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான 700 கோடி ருபா நிதியை நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் மக்கள் வங்கி ஆகியன கடன் அடிப்படையில் வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .