2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை மாவட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

மஹிந்த சிந்தனை தூர நோக்கு திட்டத்தின் கீழ் தென் மாகாண சபையின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இவர்கள் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன்போது 242 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் ஆர்.சீ.டி.சொய்ஸா, தென் மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .