2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்...

Mayu   / 2026 மார்ச் 26 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (26) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இன்று முதல் தத்தமது வங்கிக் கணக்குகளின் ஊடாக 'அஸ்வெசும' நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .