J.A. George / 2021 ஜனவரி 15 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர், இன்று(15)அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,219ஆக அதிகரித்தது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 512 பேர் இன்று(15) குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,259 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 6 ,709 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .