2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக பதற்றம்

Nirosh   / 2022 மார்ச் 31 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றனர். 

நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X